மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வணங்கான் படத்தில் அருண் விஜயின் கதாபாத்திரம் இதுவா? வெளியான அசத்தல் தகவல்.!
இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவரும் திரைப்படம் வணங்கான். முதலில் இந்த திரைப்படத்தை சூர்யாவை வைத்து பாலா இயக்கி வந்த நிலையில், ஒரு சில காரணங்களால் சூர்யா விலகினார். அதன் பின்னர் தற்போது அருண் விஜய் அந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை இயக்குனர் பாலாவே தயாரித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் இயக்குனரும், நடிகர்ருமான முஸ்லிம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அருண் விஜய் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் அருண் விஜய் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத நபராக நடிக்கிறார் என கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அருண் விஜய் ஒரு கையில் பிள்ளையாரையும், மற்றொரு கையில் பெரியாரையும் வைத்திருந்த புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.