பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சத்தமே இல்லாமல் முடிந்த நிச்சியதார்த்தம்: சன் டிவி நடிகைக்கு விரைவில் திருமணம்.!
சன் தொலைக்காட்சியில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பு செய்யப்பட்ட வந்த நெடுந்தொடர் வானத்தைப்போல. அண்ணன் - தங்கைகளின் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஓடிய நெடுந்தொடரில் கதாபாத்திரத்தின்படி அண்ணன் சின்ராசுவின் மீது பாசத்தை பொழியும் தங்கையாக துளசி இருந்தார்.
இந்த துளசி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சுவேதா. தமன் சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். துளசி அந்த கதாபாத்திரத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து, மன்யா ஆனந்த் தற்போது நடிந்து வந்தார். அதேபோல சின்ராசுவாக நடித்த தமனும் விலகவே, ஸ்ரீகுமார் அந்த இடத்திற்கு முன்னேற்றப்பட்டார்.
பல கதாபாத்திரங்கள் அந்த தொடரில் மாறினாலும் தொடர்ந்து அந்த சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் சீரியல் நடிகை ஸ்வேதாவுக்கு திருமணம் நடைபெற உள்ளது. கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த காதலர் மதுசங்கர் கௌடா என்பவரை சீரியல் நடிகை ஸ்வேதா திருமணம் செய்ய இருக்கிறார்.
இவர்களின் நிச்சயதார்த்தமானது தற்போது நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றது.