மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடுத்தடுத்தாக நடிகை வாணி போஜனுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்! தீயாய் பரவும் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெருமளவில் பிரபலமான, தெய்வமகள் சீரியலில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் வாணிபோஜன். அதனைத் தொடர்ந்து அவர் லட்சுமி வந்தாச்சு என்ற சீரியலிலும் நடித்துள்ளார். பின்னர் வெள்ளித்திரைக்கு தாவிய அவர் முதன்முதலாக அசோக்செல்வன் ஹீரோவாக நடித்த ஓ மை கடவுளே என்ற படத்தில் நாயகியாக நடித்தார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், வைபவ், வெங்கட்பிரபு நடிப்பில் உருவாகி வரும் லாக்கப் படத்திலும் அவர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து வாணி போஜன் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரசன்னா இயக்க உள்ளார். இந்நிலையில் வாணி போஜன் தனது திறமையால் அசுர வேகத்தில் முன்னேறி தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்க்கின்றனர்.