மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பணத்திற்காக என்ன வேணும்னாலும் செய்வீங்களா.? வாணி போஜன் வேதனை..
விஜய் டிவியில் ஒளிபரப்பான "ஆஹா" சீரியல் மூலம் அறிமுகமானவர் வாணி போஜன். இதைத் தொடர்ந்து ஜெயா டிவியில் ஒளிபரப்பான "மாயா", சன்டிவியில் ஒளிபரப்பான "தெய்வ மகள்" ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார்.
2014 மற்றும் 2018ம் ஆண்டிற்கான சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருதுகளை வென்றுள்ள வாணி போஜன், சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார் வாணி போஜன்.
மேலும் சன்டிவியில் ஒளிபரப்பான அசத்தல் சுட்டீஸ், விஜய் டிவியில் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ்2 ஆகிய நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து ஒரு தெலுங்குப் படத்தில் நடித்த இவர், பிறகு 2020ம் ஆண்டு "ஓ மை கடவுளே" தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய வாணி போஜன், " சின்னத்திரையில் இருந்த வரை எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் சினிமாவில் ஒருவரோடு நடித்தவுடன், அவருடன் இணைத்து தவறாக எழுதி விடுகிறார்கள். வியூஸ்க்காகவும், பணத்திற்காகவும் இப்படி தவறான தகவலை பரப்புவதா என்று மன வேதனையுடன் கூறியுள்ளார்