மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட்ஜஸ்ட்மென்ட் குறித்த ஓப்பனாக பேசிய வாணி போஜன்.? இணையத்தில் வைரலாகும் வீடியோ.!?
சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணி போஜன் தமிழ் திரைத்துறையில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருகிறார். சின்ன திரையில் இருந்து சீரியல் நடிகையாக திரைப்பயணம் செய்த வாணி போஜன் தற்போது வெள்ளி திரையில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
முதன் முதலில் வெள்ளித்திரையில் 'மீக்கு மாத்திரமே செப்தா' என்ற தெலுங்கு மொழியில் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'ஓ மை கடவுளே' திரைப்படம் இவருக்கு நல்ல பெயர் பெற்று தந்தது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'மகான்' திரைப்படத்தில் விக்ரமிற்கு கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும், மீரள், லவ், மலேசியா டு அம்னீசியா போன்ற வெப் தொடர்களிலும் நடித்த பிஸியான நடிகையாக இருந்து வருகிறார். திரைத்துறையில் மட்டுமல்லாது சமூக தளங்களிலும் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார் வாணி போஜன்.
இது போன்ற நிலையில் வாணி போஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசி இருக்கிறார். அதாவது "அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான்பெரிய நடிகையாக வேண்டும் என்பது என் ஆசை கிடையாது. எனக்கு நிறைய பட வாய்ப்புகள் கைவசம் உள்ளது. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் கூட நான் தான் நடிக்கவிருந்தது. ஆனால் அப்போது நான் வேலை பார்த்துக் கொண்டிருந்ததால் என்னால் நடிக்க முடியவில்லை" என்று மனம் திறந்து பேசி இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.