மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. நடிகை வாணி போஜனுக்கு திருமணமா?? வீடியோவை கண்டு செம ஷாக்கான ரசிகர்கள்!!
சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்று புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவர் வாணிபோஜன். இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்ற தொடரில் ஹீரோயினாக சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானார். இந்த தொடரின் மூலமே இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.
இதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் களமிறங்கிய அவர் ஓ மை கடவுளே படத்தின் மூலம் செம ரீச்சானார். அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. மேலும் வாணி போஜன் கைவசம் தற்போது சசிகுமாருக்கு ஜோடியாக பகைவனுக்கு அருள்வாய், விக்ரம் பிரபுவின் பாயும் ஒலி நீ எனக்கு, தாழ் திறவா, ரேக்லா போன்ற படங்கள் உள்ளன.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது தான் திருமணக் கோலத்தில் இருப்பது போன்ற வீடியோவை பகிர்ந்துள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் வாணி போஜனுக்கு திருமணமா? என ஷாக்காகினர். ஆனால் பின்னர் இது ஷூட்டிங்கிற்காக போடப்பட்டுள்ள கெட்டப் என தெரியவந்துள்ளது.