மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்ன.. இப்படி ஆகிருச்சே! செம வருத்தத்தில் வாணி போஜன் ரசிகர்கள்! ஏன்? என்ன காரணம் தெரியுமா??
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மகான். இப்படத்தில் சீயான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.
இது நடிகர் விக்ரமின் 60வது திரைப்படமாகும். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ளதற்கு இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம்
பிப்ரவரி 10 ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் கதாநாயகிகளாக சிம்ரன் மற்றும் வாணி போஜன் நடிப்பதாக தகவல்கள் வெளிவந்தது.
ஆனால் படத்தில் வாணி போஜன் காட்சிகள் ஒன்றுகூட இடம் பெறவில்லை. மேலும் இதுகுறித்து அவரது ரசிகர்கள் கேள்வியெழுப்பி வந்தனர். இந்நிலையில் படத்தின் நீளம் காரணமாக அவர் நடித்த காட்சியை நீக்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.