திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அச்சச்சோ!! மகளை பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பி விட்டு வனிதா எங்கு சென்றுள்ளார் என்று பாருங்கள்... வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வனிதா. அதனை தொடர்ந்து ஒரு சில படங்கள் மற்றும் சர்ச்சையில் சிக்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு வனிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சில செயல்களால் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இதனையடுத்து வனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் வெற்றியாளரானார். பின்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் பீட்டர் பாலுடன் திருமணம், விவாகரத்து என பல சர்ச்சைகளை சந்தித்தார். ஆனால் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் வனிதா.
தற்போது தனது மூத்த மகள் ஜோவிகாவை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அனுப்பி விட்டு இளைய மகளுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருக்கும் புகைப்படங்களை தற்போது வனிதா வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.