#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அந்த லிப்லாக் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துக் கூறிய ரசிகர்! அதற்கு வனிதாவோட தரமான பதிலடியை பார்த்தீர்களா!!
சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகைகளில் ஒருவர் வனிதா. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், ஒருசில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இந்நிலையில் அவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துக் கொண்டு 3 மாதத்திலேயே அவரை பிரிந்தார்.
அதனைத் தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்த அவர் தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாடியுள்ளார். இந்நிலையில் திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளனர். இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் பீட்டர் பாலுடன் திருமணத்தின் போது எடுத்த லிப் லாக் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
இதற்கு வனிதா, நான் எப்பொழுதும் அன்புக்குரியவள் என்று நினைவூட்டியதற்கு மிக்க நன்றி. காதல் என்பது ஒரு அழகான விஷயம். மற்றவர்கள் உங்கள் அன்புக்கு தகுதியானவர்கள் இல்லை அல்லது சூழ்நிலை சரியாக இல்லை என்றால் அதிலிருந்து விலகி செல்ல வேண்டும். உங்களுக்கு உங்களைப் போன்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கு இது புரியாது என பதிலளித்துள்ளார்.