திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அட.. சூப்பரு! அம்மாவையே மிஞ்சிடுவார் போல! வைரலாகும் நடிகை வனிதாவின் மகள் வெளியிட்ட வீடியோ!!
தமிழ் சினிமாவில் சந்திரலேகா படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை வனிதா. அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலேயே நடித்துள்ள அவர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது செயல்பாடுகளால் ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளானார்.
மேலும் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டு, மூன்று மாதத்திலேயே விவாகரத்து பெற்று இணையத்தில் பேசுப்பொருளானார். ஆனால் எதனையும் தைரியமாக எதிர்கொள்ளக்கூடிய வனிதா அதனையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்தடுத்ததாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், படங்கள், சமையல் என பிஸியாக உள்ளார்.
நடிகை வனிதாவின் மூத்தமகள் ஜோவிகா. அவரும் சிறுவயதிலேயே மிகவும் பக்குவமானவர். தனது அம்மாவை போலவே மிகவும் தைரியமானவர். இந்த நிலையில் ஜோவிகா தற்போது தான் சிக்கன் சமைத்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனைக் கண்ட நெட்டிசன்கள் வனிதாவின் மகளாச்சே, அப்படியே அம்மா மாதிரி என கமெண்ட் செய்து வருகின்றனர்.