மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இவன்தான் என் மகன்.. மடியில் அமர வைத்து கொஞ்சும் பிக்பாஸ் வனிதா! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களான விளங்கிய நடிகர் விஜயக்குமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா. இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் ஒரு சில படங்களிலேயே நடித்துள்ளார்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர்போன அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் அவரது சில செயல்பாடுகள் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஊட்டியது. மேலும் அவருக்கு ஏற்கனவே இருமுறை திருமணமாகி வயதுக்கு வந்த இரு மகள்கள் இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து, ஒரு சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்றார். இதனால் அவர் இணையத்தில் பல விமர்சனத்திற்கும் உள்ளானார்.
ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வனிதா தொடர்ந்து யூடியூப், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என செம பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் வனிதா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது தனது செல்ல நாய்க்குட்டி ஒன்றை மடியில் வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எனது நாய் மகன் என்று பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.