உங்க வேலைய பாருங்க.. ஆவேசமாக பதிலடி கொடுத்த நடிகை வனிதா! ஏன்? அப்படி என்னதான் நடந்தது தெரியுமா?



vanitha reply to who adviced her about fourth marriage

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் பிரபல முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் ஆவார். வனிதா பல சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர். அவர் கடந்த ஆண்டு பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டு மூன்று மாதத்திலேயே விவாகரத்து பெற்று பேசுப்பொருளானார். 

அதனைப் பொருட்படுத்தாத வனிதா அடுத்தடுத்து படங்கள், டிவி நிகழ்ச்சிகள், யூடியூப் சேனல் என பிஸியாக உள்ளார். இந்த நிலையில் அவர் வட மாநிலத்தை சேர்ந்த பைலட் ஒருவரை  நான்காவதாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் பரவியது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த வனிதா, தான் இப்போதும் சிங்கிள் என்றும், அவைலபிள் என்றும் குறிப்பிட்டு வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்  என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நெட்டிசன் ஒருவர், என்னது அவைலபிளா.. உங்களுக்கு இரண்டு பெண்பிள்ளைகள் இருக்காங்க என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். அவர்களின் நல்லதுக்காகவாது இனிமேல் இதுபோன்ற அசிங்கங்களை நிறுத்திக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

                                               vanitha

அதற்கு ஆவேசமடைந்த வனிதா, நாங்கள் அனைவரும் வளர்ந்து வருகிறோம், எங்கள் வாழ்க்கையை, கடமையை பார்த்துக் கொள்ள எங்களுக்கு தெரியும். எங்களுக்கு தேவைப்படும் போது நீங்கள் வந்து உதவ போறீங்களா? உங்களுடைய வாழ்க்கை எதுவோ அதை பாருங்கள். நான் ஒரு நடிகை, என் நடிப்பு பிடித்திருந்தால் என் படங்களை பாருங்கள், மற்றபடி  உங்க வேலையை நீங்கள் பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.