#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிவாஜியின் கைகளில் இருக்கும் இந்த பிரபல நடிகை யார் தெரியுதா.? அட.! அந்த நடிகையா இது.?
தனது முதல் பிறந்த நாள் அன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன்னை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிக்பாஸ் புகழ் வனிதா.
சந்திரலேகா என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா. இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள். ஒருசில படங்களிலையே சினிமாவில் இருந்து காணாமல் போன இவர் தனது குடும்ப சண்டையால் அவரது தந்தையுடன் சண்டை போட்டு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.
அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் மூன்றில் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கினர். மக்கள் எதிர்பார்த்ததுபோலவே சண்டை, சர்ச்சை என பிக்பாஸ் நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைத்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு குக் வித் கோமாளி தொடரில் பங்கேற்ற இவர் தற்போது விஜய் டீவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவர்களின் ஒருவராகவும் உள்ளார்.
இந்நிலையில், தனது முதல் பிறந்த நாள் அன்று எடுத்த புகைப்படம் என்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் வனிதா. அதில், நடிகர் சிவாஜிகணேசன் அவர்கள் வனிதாவை தூக்கி வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.