ஒருத்தனுக்கு ஒருத்தினு சொல்றாங்க, எய்ட்ஸில் ஏன் முன்னணி இடம்? இயக்குனர் டிஜே ஞானவேல்.!
வெள்ளை சேலையில், கழுத்தில் தாலியுடன் மிக அழகாக வனிதா.! அவரே வெளியிட்ட புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த சந்திரலேகா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை வனிதா. அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சில செயல்களால் விமர்சனத்திற்கு உள்ளானார்.
இதனையடுத்து வனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதன் வெற்றியாளரானார். பின்னர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் மூன்றாவது திருமணம், விவாகரத்து என பல சர்ச்சைகளை சந்தித்தார். ஆனால் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தன்னுடைய வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் வனிதா.
சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் வனிதா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் போன்றவற்றை அவ்வப்போது வெளியிடுவார். சமீபத்தில் பவர் ஸ்டாருடன் சேர்ந்து பிக்கப் டிராப் என்ற படத்தில் நடிக்கப் போவதாக அறிவித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கழுத்தில் மஞ்சள் தாலியுடன் சேலையில் மிக அழகாக ஜொலிக்கும் புகைப்படத்தை வனிதா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.