திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
எனது நேர்மையான ஓட்டு இவருக்குத்தான்.! அதிரடி டுவிட்டால் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகிய வத்திக்குச்சி வனிதாக்கா!!
பிக்பாஸ் சீசன் 3 மிகவும் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது சாண்டி, ஷெரின், முகேன், லாஸ்லியா, தர்சன் மற்றும் கவின் என 6 பேர் மட்டுமே விளையாடி வருகின்றனர். பிக்பாஸ் எவ்வளவோ கடுமையான டாஸ்க் கொடுத்தும் பிக்பாஸ் பட்டத்தை வெல்ல போட்டியாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பிக்பாஸ் 5 லட்சம் ரூபாயை பெற்று கொண்டு யார் வெளியே போக விரும்புகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்பொழுது கவின் நான் வெளியேற தயார் என்று கூறி, போட்டியாளர்கள் எவ்வளவோ கூறியும் பிடிவாதமாக வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் சாண்டி மற்றும் லாஸ்லியா ஆகியோர் கதறி அழுதனர். இந்த செயல் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை iஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டின் முன்னாள் போட்டியாளர் வனிதா கவின் வெளியேறியது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நான் கவினுக்கு சல்யூட் அடிக்கிறேன் .அவன் இந்த வாய்ப்பிற்காகதான் காத்துக் கொண்டிருந்துள்ளான். இதற்கான அவன் எந்தவொரு விதிமுறைகளையும் உடைக்கவில்லை. நாடகமும் போடவில்லை என கூறி #kavinarmy என டேக் செய்துள்ளார்.
#BiggBossTamil3 I am saluting #Kavin for the decision he took .call it sacrifice or whatever.he had b****s to do it and he waited for the opportunity and didn't break any rules or create a new drama.he proved what he stood up for and followed his conscience #Kavinarmy
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) September 26, 2019
மேலும் பல போட்டியாளர்களை பற்றியும் கூறிய அவர் மேலும், என்னுடைய ஓட்டு லாஸ்லியாவிற்குதான். இது என்னுடைய நேர்மையான தனிப்பட்ட கருத்து. நான் அவரை அருகில் இருந்து பார்த்துள்ளேன். அவள் டார்லிங், மேலும் மற்ற நபர்கள் மீது எனக்கு எந்த ஒரு தனிப்பட்ட கோபமும் இல்லை. மற்ற போட்டியாளர்களை ஒப்பிட்டு பார்க்கையில் லாஸ்லியாதான் தான் என்னுடைய சிறந்த தேர்வு பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் ஆதரவாகவும், விமர்சனம் செய்தும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
I AM VOTING FOR #Losliya ,THIS IS MY HONEST PERSONAL OPINION .THE GIRL ISN'T A BAD CHOICE AT THIS POINT. I've seen her up close and personal and she's a darling ❤️.I don't have any grudge against anyone else.but comparatively she's my best choice.#losliya_army
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) September 26, 2019