திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அம்மாவின் திருமண அறிவிப்பை கேட்டு மகள் வெளியிட்ட கமெண்ட் என்ன தெரியுமா? வைரலாகும் பதிவு..
கடந்த 1995 ஆம் ஆண்டு தளபதி விஜயுடன் இணைந்து சந்திர லேகா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் படங்களில் அதிகம் நடிக்காவிட்டாலும் தொடர் திருமணம் பின் விவாகரத்து, குடும்ப பிரச்சினை, சொத்து பிரச்சனை என மக்களால் அதிகம் பேசப்பட்டார்.
அதனை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 யில் கலந்து கொண்டதன் மூலம் இன்னும் மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானார். அதன்பிறகு தனது சமையல் திறமையை வெளிக்காட்டும் விதமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றி வாய்ப்பை தட்டி சென்றார். அதன் பிறகு புதிதாக யூடியூப் சானல் ஒன்றையும் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது நடிகை வனிதா மூன்றாம் திருமணமாக இயக்குனர் பீட்டர் பால் என்பவரை வரும் 27 ஆம் தேதி உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த திருமணத்திற்கு வனிதாவின் மகள் ஜோவிகா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் நான் உங்களை எவ்வளவு நேசிக்கிறேன் என்று உங்களுக்கு தெரியும். என்ன நடந்தாலும் நான் உங்களை ஆதரிப்பேன். நான் உங்களிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். உங்களுடன் இருந்த இந்த 15 வருடங்களும் சிறப்பாக இருந்தது.
மேலும் உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு பிடித்த வழியில் வாழ்கிறீர்கள். அதில் எந்த தவறும் இல்லை. உங்களிடம் இருக்கும் மகிழ்ச்சிக்கு நீங்கள் நிச்சயம் தகுதியானவர். நான் இதனை உங்கள் மகளாகவும், நண்பியாகவும் சொல்கிறேன். வாழ்த்துகள் மா என்று தெரிவித்துள்ளார்.