திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ப்பா.. வேற லெவல்தான்! நடிகை வரலட்சுமி வெளியிட்ட வீடியோவை கண்டு வாயடைத்து போன ரசிகர்கள்!!
தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி. அதனைத் தொடர்ந்து அவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் ஹீரோயினாக மட்டுமின்றி வில்லியாகவும் களமிறங்கி ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெளிவந்த சர்க்கார், விஷால் நடிப்பில் வெளிவந்த சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் பயங்கர வில்லியாக நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டு கிடைத்தது. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார்.
வரலட்சுமி கைவசம் தற்போது காட்டேரி, பாம்பன், பிறந்தாள் பராசக்தி, கலர்ஸ், யானை ஆகிய தமிழ் படங்களும், லாகம் என்ற கன்னட படமும் உள்ளது. இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலால் வீட்டில் முடங்கியிருக்கும் வரலட்சுமி வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி விடுகிறது.