திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாரிசு இசை வெளியீட்டு நிகழ்ச்சி.. இந்த சேனலில் வெளியீடு., வெளியான அறிவிப்பு.! ஆனால், ஒரு ட்விஸ்ட்.!
வாரிசு திரைபடத்தில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தில் ஆறு பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் மீதமுள்ள பாடல்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
புதிய ஆல்பத்தின் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 24ல் சனிக்கிழமை நேர உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
வாரிசு இசை வெளியீட்டு விழா மாலை 4 மணிக்கு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை சன் டிவியில் ஒளிபரப்பாகும் என ட்விட்டரில் சன்டிவி நிறுவனம் உறுதி செய்துள்ளது. எனினும், இது நேரடி ஒளிபரப்பு என குறிப்பிடப்படவில்லை.
இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படுமா அல்லது எடிட் செய்யப்பட்டு பல மணி நேரம் கழித்து ஒளிபரப்பப்படுமா என்பது இன்னும் தெரியவில்லை.