#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#BigBreaking: தளபதி ரசிகர்களுக்கு திடீர் சர்பிரைஸ்.. வாரிசு படத்தின் வெளியீடு தேதி திடீர் மாற்றம்.. தல Vs தளபதி மோதல்...!
ஜனவரி 12ம் தேதி வெளியாகவிருந்த வாரிசு தனது துணிவால் தலயின் துணிவுடன் போட்டியிட முடிவெடுத்து ஜனவரி 11ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது..
தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கத்தில், நடிகர் விஐய், நடிகை ரஷ்மிகா மந்தனா, பிற நடிகர்கள் பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஸ்ரீமன், சரத் குமார் உட்பட பலர் நடித்து பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு.
இப்படத்தின் டிரைலர் இன்று வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்றுள்ளது. படத்தின் இசையமைப்பு பணிகளை எஸ். தமன் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் பட விநியோக பணிகளை மேற்கொள்கிறது.
இந்த நிலையில், படக்குழு திடீரென படத்தின் ரிலீஸ் தேதியை 11 ஆக மாற்றி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. படக்குழுவின் ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அன்று போனி கபூரின் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான துணிவு திரைப்படமும் ரிலீசாகிறது.
இதனால் தல - தளபதி நேரடி மோதலை விஜயின் படக்குழு முடிவு செய்துள்ள காரணத்தால், அன்றைய நாளில் ரசிகர்களின் ஆர்ப்பாட்டம், கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்று களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
#Varisu is releasing worldwide in theatres on Jan 11th 🔥
— Sri Venkateswara Creations (@SVC_official) January 4, 2023
Indha Pongal pakka celebration nanba 🤩#VarisuFromJan11 #Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman @iamRashmika @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana #Varisu #VarisuPongal pic.twitter.com/tJeqVqNYdB