மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உண்மை நடக்கும்.. பொய் பறக்கும்.! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எஸ்.ஜே சூர்யாவின் வதந்தி வெப் தொடர் ட்ரைலர்! இதோ..
தமிழ் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுத்து, பின் நடிகராக அவதாரமெடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் எஸ்.ஜே சூர்யா. அவர் தற்போது பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி வருகிறார். எஸ். ஜே சூர்யா கைவசம் தற்போது பொம்மை மார்க் ஆண்டனி, ஆர்சி15 போன்ற படங்கள் உள்ளன.
இந்த நிலையில் அவர் தற்போது கொலைகாரன் பட இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள வதந்தி என்ற வெப் தொடரின் மூலம் ஓடிடியில் களமிறங்கியுள்ளார். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த வெப்தொடரை புஷ்கர் காயத்ரி தயாரித்துள்ளார். இதில் நாசர், லைலா, ஸ்மிருதி வெங்கட், பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மேலும் அந்த வெப்தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. தொடர் டிசம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த நிலையில் வதந்தி வெப்தொடரின் ட்ரைலர் இன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.