மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னை மட்டுமில்ல, என் குழந்தையையும்.. வேதனையில் துடித்த வெண்பா! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அவ்வாறு தற்போது பல அதிரடி திருப்பங்களுடன், நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை கூட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் கொடூர வில்லி கதாபாத்திரத்தில் வெண்பாவாக நடித்து அனைவரையும் மிரளவைத்தவர் பரீனா.
இந்நிலையில் நடிகை ஃபரீனா கடந்த 2017ஆம் ஆண்டு ரஹ்மான் உபைத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. கர்ப்பமாக இருந்தபோதே தொடரில் இருந்து விலகாமல் பரீனா தொடர்ந்து நடித்து வந்தார். இதற்கிடையில் அவரை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டினாலும், சிலர் மோசமாக விமர்சனமும் செய்தனர்.
ஆனாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பரீனா தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் விஜய் டெலிஅவார்ட்ஸ் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. அதன் முன்னோட்டமாக விஜய்யின் தானை தலைவி என்ற பெயரில் ஹீரோயின்கள் இடம் பெற்றுள்ள ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் பரீனா பேசும்போது, வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் எனக்கு மிகவும் மோசமான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதையும் தாண்டி நான் கர்ப்பமாக இருந்து நடித்தபோது என்னை மட்டுமின்றி என்னுடைய குழந்தையையும் சேர்த்து திட்டினார்கள் என வருத்தமாக பேசியுள்ளார். அந்த ப்ரமோ வீடியோ வைரலாகி வருகிறது.