கஸ்டடி படத்தில் அந்த மாதிரி காட்சிகளை வைக்க வெங்கட் பிரபுவை கட்டாயப்படுத்திய தயாரிப்பாளர்.. பத்திரிக்கையாளர் சந்திப்பில் போட்டுடைத்த வெங்கட் பிரபு.?



Venket prabhu talking about custody movie

தெலுங்கு சினிமாவில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'கஸ்டடி' இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.

Custody

'கஸ்டடி' திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் தளபதி 68 திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கவிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவிருக்கிறார்.


இது போன்ற நிலையில், பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வெங்கட் பிரபு 'மாநாடு' திரைப்படத்தில் இந்து, முஸ்லிம் பிரச்சினைகளைப் பற்றி பேசியிருந்தேன். அப்படத்தில் அப்துல் காலிக் எனும் முஸ்லிம் நபர் டைம் லூப்பில் மாட்டிக் கொள்கிறார். என்ற கதையை சிரிக்கும் விதமாக கூறியிருந்தேன். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Custody

சமீபத்தில் நான் இயக்கிய 'கஸ்டடி' திரைப்படத்தை வேற மாதிரி பண்ணலாம் என்று நினைத்திருந்தேன். தெலுங்கு மக்கள் எமோஷனல் காட்சிகளை தான் கேட்கிறார்கள். சீரியஸான படமாக பண்ண வேண்டியதாகிவிட்டது என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வெங்கட் பிரபுவை கதைகளை மாற்றியமைக்க தயாரிப்பாளர் கட்டாயப்படுத்தினாரா என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.