திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
முதல் நாளே அதிரடி வசூல் வேட்டை!! மாஸ் காட்டும் சிம்புவின் வெந்து தணிந்தது காடு!! எவ்வளவு கோடி தெரியுமா??
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த மூவர் கூட்டணி விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.
இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மூலம் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். வெந்து தனிந்தது காடு படத்தில் சிம்பு 20 வயது இளைஞனாக நடித்துள்ளாராம். இதற்காக சிம்பு தனது உடல் எடையை நன்கு குறைத்துள்ளாராம். இந்த நிலையில் நேற்று பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே திரையரங்குகளில் வெளிவந்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் படம் வசூலிலும் மாஸ் காட்டி வருகிறது. வெந்து தணிந்தது காடு திரைப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.10 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் மட்டும் 7.4 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும், சென்னையில்
ரூ.94 லட்சம் வசூலித்துள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. மேலும் வரும் நாட்களில் வசூல் வேட்டை பெருமளவில் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.