மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஒரு காட்சிக்கு மட்டும் 8கோடி ரூபாய் செலவானது!" விடுதலை படம் குறித்து மனம் திறந்த வெற்றி மாறன்!
இந்த வருடம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் "விடுதலை". இந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கிறார், வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இப்படம் உருவான பின்னணியை இயக்குனர் வெற்றிமாறன் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர், கங்கனா சென், மலையாள இயக்குனர் ஜியோ பேபி, கன்னட இயக்குனர் ஹேமந்த், தமிழ் இயக்குனர்கள் நெல்சன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய வெற்றிமாறன், "முதலில் இந்தப் படத்தில் சூரி மட்டும் தான் நடித்தார்.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கைதி சிறுகதையைத் தழுவி ஒரு திரைக்கதையை எழுதினேன். ஆனால் ஜெயமோகன் அந்தக் கதையை படமாக்குவதற்கான உரிமத்தை முன்னமே வேறு ஒருவருக்கு தந்துவிட்டதாகக் கூறினார். அதன்பிறகு என் திரைக்கதையை அவரிடம் காட்டினேன்.
அப்போது அதே போல் ஒரு கதையை எழுதியிருப்பதாகக் கூறி துணைவன் கதையை எனக்குக் கொடுத்தார். முதலில் 4கோடியில் இந்தப் படத்தை முடிக்க திட்டமிட்டேன். ஆனால் படம் முடியும்போது 60 கோடி செலவாகி இருந்தது. தயாரிப்பாளர் எல்ரெட் குமார் எனக்கான சுதந்திரத்தைக் கொடுத்திருந்தார்" என்று கூறினார்.