மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"முதலில் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும்" விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து கூறிய வெற்றி மாறன்..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த "லியோ" திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி உலகெங்கிலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சில வருடங்களுக்கு முன்பிருந்தே விஜய் அரசியலுக்கு வருவதாக தகவல்கள் பரவி வந்தன.
தற்போது அது உறுதிப் படுத்தப்பட்டுள்ள நிலையில், விஜயின் மக்கள் இயக்கம் மூலமாக அவரது ரசிகர்கள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தற்போது விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.
அந்தவகையில் இயக்குனர் வெற்றி மாறனிடமும் இந்த கேள்வி வைக்கப்பட்டது. அது குறித்து கருத்து கூறிய வெற்றி மாறன் " யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அதுகுறித்து யாரும் கருத்து கூற முடியாது.
ஆனால் அரசியலுக்கு வருவதற்கு முன், களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். விஜயும் களத்தில் இறங்கி வேலை செய்த பின்னர் அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும்" என்று வெற்றி மாறன் கூறியுள்ளார். விஜய் - வெற்றிமாறன் கூட்டணியில் இதுவரை எந்தப் படமும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.