மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹீரோவாக களமிறங்கும் பிக்பாஸ் முகேன்! ஹீரோயின் யார்னு பார்த்தீர்களா! வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாகி வெற்றியாளராக திகழ்ந்தவர் முகேன் ராவ். மலேசியாவை சேர்ந்த பாடகரான இவருக்கு ஏராளமான ரசிகர்பட்டாளமே உள்ளனர்.
இந்நிலையில் முகேன்ராவ் தற்போது தமிழில் வெப்பம் படத்தை இயக்கிய அஞ்சனா அலிகான் இயக்கும் படத்தில் நடிப்பதன் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனுகீர்த்தி வாஸ் நடிக்கிறார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர்.
வெற்றி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.