மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏர்போர்ட்டில் அசுரன் இயக்குனர் வெற்றிமாறனுக்கு நேர்ந்த அவமானம்! அதுவும் எதனால் பார்த்தீர்களா? ஆதங்கத்துடன் அவரே கூறிய தகவல்!
தமிழ் சினிமாவில் பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என அடுத்தடுத்து பல தரமான படங்களை கொடுத்து தற்போது முன்னணி இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில், ஹிந்தி தெரியாததால் ஏர்போர்ட்டில் தான் பட்ட அவமானம் குறித்து பேசியுள்ளார்.
அப்பொழுது அவர், 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆடுகளம் படத்தை கனடாவில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் ஸ்கிரீன் செய்துவிட்டு இந்தியாவிற்கு திரும்பினோம். அப்பொழுது டெல்லி ஏர்போர்ட்டில்,
இமிகிரேஷனில் இருந்தவர் என்னிடம் ஹிந்தியில் பேசினார். அப்பொழுது நான் எனக்கு ஹிந்தி தெரியாது என ஆங்கிலத்தில் பேசினேன்.
அதற்கு அவர், இந்த நாட்டோட தாய்மொழி உங்களுக்கு தெரியாதா என்றார். அதற்கு நான் என் தாய் பேசும் மொழி தமிழ். அதுதான் என் தாய்மொழி என கூறினேன். மேலும் மற்றவர்களிடம் பேச எனக்கு ஆங்கிலம் தெரியும் எனவும் கூறினேன். உடனே அவருக்கு கோபம் வந்துவிட்டது. நீங்கெல்லாம் இப்படித்தான். தமிழர்களும், காஷ்மீர் மக்களும் தான் இந்த தேசத்தை பிரிக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் தீவிரவாதிங்கன்னு என்னை தனியாக நிற்க வைத்துவிட்டார்.
தயாரிப்பாளர் கதிரேசனும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் அவரிடம் என்னைப் பற்றி எடுத்துக்கூறியும், அவர் எதையும் கேட்கவில்லை. 45 நிமிஷம் என்னை தனியாக நிற்க வைத்தார். அதன் பிறகு வேறு அதிகாரி ஒருவர் வந்து என்னை அனுப்பி வைத்தார். நான் என் தாய்மொழியில் பேசுவது எப்படி இந்த நாட்டோட ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும்? என ஆதங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.