திரைப்படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா.? வெளியான ஷாக் ரிப்போர்ட்.!



Vetrimaran interview about viduthalai

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் சூரி. இவர் முதன்முறையாக கதாநாயகனாக நடித்த திரைப்படம் தான் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி, மிகப்பெரிய சாதனை படைத்த விடுதலை திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிகர் சூரியுடன் சேர்ந்து, ராஜிவ்மேனன், பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தின் பட்ஜெட் தொடர்பாக அதன் இயக்குனர் வெற்றிமாறன் தற்போது பேசியிருக்கிறார்.

Viduthalai

இந்த திரைப்படத்தை முதன்முதலில் தொடங்கியபோது 4.5 கோடி மட்டுமே இந்த திரைப்படத்திற்கான பட்ஜெட்டாக நிர்ணயம் செய்யப்பட்டதாக சொல்லியிருக்கிறார் வெற்றிமாறன். 35 நாட்களுக்குள் இந்த திரைப்படத்தை முடித்து விடலாம் என்று நினைத்தார் இயக்குனர். ஆனாலும் அவர் நினைத்ததை போல எதுவும் நடக்கவில்லை. முதல் கட்ட படப்பிடிப்பிலேயே படத்தின் கதையில் 10% மட்டுமே படமாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதற்கு கிட்டத்தட்ட 70% பட்ஜெட் முடிவடைந்து விட்டதாம்.

பிறகு ஒரு சில பிரச்சனைகள் காரணமாக, ஏற்கனவே படப்பிடிப்பு நடந்த இடத்தில் வெற்றிமாறனால் படப்பிடிப்பை தொடங்க முடியவில்லை. ஆகவே மற்றொரு இடத்திற்கு படப்பிடிப்பை மாற்றியிருக்கிறார். அங்கே சென்றதும் கதைக்காக அதிகப்படியாக எழுத தொடங்கி விட்டாராம் வெற்றி மாறன். இதன் பின்னர் தான், விஜய் சேதுபதி இந்த திரைப்படத்திற்குள் வந்துள்ளார். அதன் பின் 35 நாட்களுக்குள் எடுத்து முடிக்கப்பட வேண்டிய திரைப்படம் 120 நாட்களுக்குப் பின் முழுமையாக முடிக்கப்பட்டது.

Viduthalai

இதன் காரணமாக, இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் பட்ஜெட் 65 கோடியாக மாறியிருக்கிறது. இந்த திரைப்படம் 2 பாகங்களாக பிரிவதற்கு இதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதனை அந்த பேட்டியில் வெற்றிமாறன் தெரிவித்தவுடன், இதர பிரபலங்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.