மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"விடுதலை இரண்டாம் பாகம் இதனால் தான் தாமதமாகிறது!" வெற்றிமாறன் விளக்கம்!
தனுஷ் நடித்த "பொல்லாதவன்" படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றி மாறன். இவரது முதல் படமே இவருக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றுத் தந்தது. இதையடுத்து இவர் தனது இரண்டாவது திரைப்படமான "ஆடுகளம்" படத்தையும் தனுஷை வைத்து இயக்கினார்.
ஆடுகளம் திரைப்படம் தேசிய திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதையாசிரியர் உள்ளிட்ட ஆறு விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இவர் விசாரணை, அசுரன், வடசென்னை, விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
மேலும் தயாரிப்பாளராகவும் உள்ள வெற்றிமாறன் உதயம் NH 4, பொறியாளன், காக்கா முட்டை, கொடி, லென்ஸ், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'விடுதலை' திரைப்படம் நல்ல வவேற்பைப் பெற்றது.
இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுத்து வருகிறார். இந்நிலையில் வெற்றிமாறன், "இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை மூடுபனியில் எடுக்க நினைத்தோம். அதனால் தான் படம் தாமதமாகிறது. எனவே அந்தக் காட்சியை சிஜியில் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.