மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"எல்லா பேரையும் போடுவீங்க ஆனா" - பாடகரின் பெயரை மறந்த படக்குழு..! மறைமுகமாக சுட்டிக்காட்டி ஆதங்கத்தில் பொங்கும் விஜய் யேசுதாஸ்.!!
கோலிவுட், ஹாலிவுட் என கலக்கி வருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும். இறுதியாக வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.
இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வழங்குகிறார். இரட்டை வேடத்தில் நடிக்கும் தனுஷ், இப்படத்திற்கு பின் வாத்தி, சார் போன்ற படத்திலும் நடிக்கவுள்ளார். இந்த நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தில் உள்ள பாடலில் தனது பெயர் இடம்பெறாதது குறித்து பாடகர் விஜய் யேசுதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அப்படத்தில் உள்ள கண்ணீர் சிந்தா பாடல் வரிகளின் வீடியோ வெளியாகியுள்ள நிலையில், படத்தில் நடித்துள்ள தனுஷ், ராசி கண்ணா, நித்யா மேனன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இப்பாடலை பாடிய விஜய் யேசுதாஸின் பெயர் இடம்பெறவில்லை. இதுகுறித்த ட்விட் ஒன்றையும் அவர் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக உணர்த்தி பதிவிட்டுள்ளார்.