திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனைவியை பிரிந்து புதிய காதலில் விழுந்த நடிகர் விஷ்ணு விஷால் மகனுக்கு கொடுத்த சர்ப்ரைஸ் பார்த்தீர்களா!
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடிகுழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷ்ணு விஷால். இப்படத்தை தொடர்ந்து அவர் நீர்பறவை, குள்ளநரிக் கூட்டம், முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். மேலும் அவரது கைவசம் தற்போது காதன், ஜகஜால கில்லாடி, எப்ஐஆர் போன்ற படங்கள் உள்ளன.
நடிகர் விஷ்ணு விஷால் கடந்த 2011 ஆம் ஆண்டு ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஆரியன் என்ற அழகிய ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இருவருக்கும் ஒத்துவராத நிலையில் இருவரும் கடந்த ஆண்டு சட்டப்படி விவாகரத்து செய்து பிரிந்தனர். மேலும் அதனை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் பேட்மிண்டன் வீராங்னையான கட்டா ஜுவாலா என்பவருடன் காதலில் விழுந்துள்ளார். மேலும் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகும்.
The love of our lives has turned 4 today....
— VISHNU VISHAL - stay home stay safe (@TheVishnuVishal) January 31, 2021
Need you blessings...😊#HBDAryan pic.twitter.com/OAA8qqiEjK
மனைவியை பிரிந்தாலும் நடிகர் விஷ்ணு விஷால் மகன் மீது மிகுந்த அன்பு கொண்டு அவரை பொறுப்புடன் கவனித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தனது மகன் ஆரியனின் நான்காவது பிறந்தநாளை விஷ்ணு விஷால் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.