மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னை ஹோட்டல் ரூமுக்கு அழைத்தார்.! பிரபல தமிழ் இயக்குனர் மீது புகாரளித்து நடிகை வித்யாபாலன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
பாலிவுட் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை வித்யாபாலன். பாலிவுட்டில் மிகவும் கவர்ச்சியாக நடித்து வரும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம் மற்றும் வங்காள திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஏராளமான தொலைக்காட்சி விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை வித்யா பாலன் முதலில் தமிழ் திரைப்படங்களில் நடிக்கவே முயற்சி செய்து வந்துள்ளார். இவர் ஆரம்பத்தில் மாதவன் நடிப்பில் வெளிவந்த ரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் ஒரு சில காரணங்களால் முதல் கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு படத்தில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் ஸ்ரீகாந்துடன் நடிக்கவிருந்த மனசெல்லாம் படத்திலிருந்தும் ஒப்பந்தமாகி நீக்கப்பட்டுள்ளார்.
அதனைத்தொடர்ந்து அவர் பாலிவுட் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்த வித்யாபாலன் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் வித்யாபாலன் அனைத்து தமிழ் ரசிகர்களாலும் கவரப்பட்டார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் வித்யா பாலன் கூறுகையில், நான் சென்னையில் பட வாய்ப்புக்காக இருந்தபோது என்னை சந்திக்க பிரபல இயக்குனர் ஒருவர் வந்தார். அப்பொழுது நான் காப்பி ஷாப்பில் அமர்ந்து பேசலாம் என கூறினேன். ஆனால் அவரோ நிறைய பேசவேண்டும் ரூமுக்கு போவோம் என திரும்பத் திரும்ப ரூமுக்கு செல்வதிலேயே மிகவும் குறியாக இருந்தார் அதை தொடர்ந்து நானும் அவருடன் ரூமுக்கு சென்று கதவை திறந்து வைத்து பேசினேன். அதனால் அந்த இயக்குனர் 5 நிமிடங்களிலேயே அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார் என அதிர்ச்சியளிக்கும் தகவலை கூறியுள்ளார். அந்த இயக்குனர் யார் என்ற தகவலை குறிப்பிடவில்லை.