20 வருடங்கள் கழித்து தல அஜித்துடன் இணையும் பிரபல நடிகர்... உற்சாகத்தில் ரசிகர்கள்.!



 vidivelu join with Ajith movie

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. எச்.வினோத் இயக்கியிருந்த இப்படம் விமர்சன ரீதியாக சறுக்கலை சந்தித்தாலும், வசூலை வாரிக் குவித்தது.

இந்நிலையில் அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் இயக்க மீண்டும் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அஜித்தின் 62 வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க லைகா புரோடக்சன்ஸ் தயாரிக்கிறது. இந்த அடுத்தடுத்த பட அறிவிப்பால் அஜித்தின் ரசிகர்கள் தற்போது மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

மேலும் அஜித்தின் 63 வது திரைப்படம் குறித்த புதிய தகவலும் தற்போது பரவி வருகிறது. அதாவது அஜித்தை வைத்து விசுவாசம் உள்ளிட்ட பல திரைப்படங்களை  இயக்கிய சிறுத்தை சிவா மீண்டும் அஜித்துடன் இணைய இருக்கிறார். இப்படத்தை டி இமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 

Vidivelu

இப்படி மெகா கூட்டாணியுடன் உருவாகி வரும் திரைப்படத்தில்   பிரபல நடிகரான வடிவேலும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அஜித் மற்றும் வடிவேல் இருவரும் 20 வருடங்களுக்கு முன்பு ராஜா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

அந்தப் படத்தின் போது இவர்கள் இருவருக்கும் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் அவர்கள் இதுவரை வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. என்னவென்றால் அஜித் மிகவும் மரியாதை எதிர்பார்ப்பவர். ஆனால் வடிவேலு அந்த படத்தில் அவரை வாடா போடா என்று மரியாதை குறைவாக பேசியது தான் அவர்களின் பிரச்சனைக்கு காரணம் என்று சிலர் கூறி வருகின்றனர்.