#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல நடிகையிடம் அஜித் வெட்கப்பட்டாரா? அதுவும் இதை கேட்டதும்.! போட்டுடைக்கப்பட்ட ரகசியம்!!
விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தல அஜித் நடிப்பில் உருவாகி வெளிவரவிருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. பாலிவுட் சினிமாவில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியை பெற்ற படம் 'பிங்க்'. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கே 'நேர்கொண்ட பார்வை படமாக உருவாகியுள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை சதுரங்க வேட்டை, தீரன் போன்ற படங்களை இயக்கிய வினோத் இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, அபிராமி, ஆத்விக் ரவிச்சந்திரன் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
மேலும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக ட்ரெய்லரின் கடைசியில் அஜித் பேசிய வசனம் ரசிகர்களில் ஆழ் மனதில் பதிந்துவிட்டது. அதனைத் தொட்ர்நது படம் ஆகஸ்ட் 8 வெளிவரும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த படம் குறித்து நடிகை வித்யாபாலன் கூறுகையில், நான் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகர் அஜித்துடன் நடிக்க போகிறேன் என கேட்டதும் மிகவும் இன்பஅதிர்ச்சி அடைந்தேன். மேலும் தமிழில் நான் நடிக்கும் முதல் படத்திலேயே இவ்வளவு பெரிய நடிகருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததும் மிகவும் உற்சாகம் அடைந்தேன்.
மேலும் அஜித்தின் குணத்தைக் கண்டு நான் பெருமளவில் வியப்படைந்தேன். தமிழ் சினிமாவில் ரசிகர்களே கொண்டாடும் மாபெரும் நடிகரான அஜித் அவ்வளவு எளிமையாக இருந்தது எனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.மேலும் அவரை நான் தல என கூப்பிட்டதும், அவரை புகழ்ந்து பேசியதும் அஜித் வெட்கப்பட்டார் என வித்யா பாலன் கூறியுள்ளார்,