விகடன் விருது விழாவில் அவமானபடுத்தபட்ட நெல்சன்.? விஜய் நடித்த பீஸ்ட் படம் தான் காரணமா.!



Vigadan award function avoid director nelson

தமிழ் திரையுலகில் இயக்குநர் மற்றும் எழுத்தாளர் என்று பல திறமைகளை கொண்டவர் நெல்சன் திலீப்குமார். இவர் முதன்முதலாக நயன்தாரா நடித்த ' கோலமாவு கோகிலா'  திரைப்படத்தை இயக்கினார். முதல் படமே மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. இதன்பின் சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' படமும் வெற்றியை தழுவியது.

நெல்சன்

நெல்சன் தொடர்ந்து இரு வெற்றி படங்ளை குடுத்து வந்த நிலையில் இளைய தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படத்தை இயக்கி கடந்த வருடம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த அளிவிற்கு வெற்றி பெறவில்லை. இதனையடுத்து நெல்சன் சூப்பர் ஸ்டார் நடிப்பில் 'ஜெயிலர்' திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய நிலையில், சமீபத்தில் விகடன் விருது விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட நெல்சனை, விழா குழுவினர் அவமானபடுத்தியாக வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நெல்சன்

அந்த வீடியோவில் விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் விருது வழங்கும் விழாவிற்கு வருகிறார். அவர் மேடைக்கு அருகில் செல்லும் வரை பல கேமராக்கள், பவுன்சர்கள் சூழ்ந்திருந்தனர். ஆனால் நெல்சன் வரும் போது பாதி தூரம் மட்டுமே அவருடன் வந்த பவுன்சர்கள் பாதியிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனராம். இந்த வீடியோ காட்சியை நெல்சனின் ரசிகர் ஒருவர் பதிவு செய்து ஒரே ஒரு தோலிவி படத்தை குடுத்ததற்காக ரொம்ப அவமானபடுத்தாதீங்க என்று குறிப்பிட்டுள்ளார்.