மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. சூப்பரு! விக்னேஷ் சிவனை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்த நயன்! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா??
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சாமி தரிசனம், ஹனிமூன் என பிஸியாக இருக்கும் அவர்கள் சமீபத்தில் ஸ்பெயினில் இரண்டாவது ஹனிமூன் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் செப்டம்பர் 18ம் தேதி தனது 37வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக நயன்தாரா விக்னேஷ் சிவனை குடும்பத்துடன் துபாய்க்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு துபாயின் புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் கீழ் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது.
அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எனது பிறந்தநாள் என் குடும்பத்தினரின் பரிசுத்தமான அன்பாலும், என் மனைவி, என் தங்கத்தின் அற்புதமான சர்ப்ரைஸாலும் நிறைந்துள்ளது. எனது கனவு பிறந்தநாள். புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் கீழ் எனக்கு மிகவும் பிடித்தமானவர்களுடன் கொண்டாட்டம். இதை விட சிறந்ததாக என்னால் எதையும் பெற முடியாது என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்