திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
முதன்முதலாக பிஞ்சு கரங்களால் முகத்தை வருடிய மகன்கள்.! கண்கலங்கிய நயன்! விக்கி வெளியிட்ட கியூட் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நடிகை நயன்தாரா. இவர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்த அவர் தற்போது ரசிகர்களால் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார்.
நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சில மாதங்களிலேயே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களானதாக அறிவித்தனர்.
இருவரும் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுள்ளனர். மேலும் குழந்தைகள் மீது அன்பை பொழிந்து வரும் அந்த தம்பதியினர் உயிர் மற்றும் உலகம் அடிப்படையில் தங்களது குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N.சிவன், உலக் தெய்வேக் N.சிவன் என பெயர் வைத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அன்னையர் தினத்தை முன்னிட்டு விக்னேஷ் சிவன், நயன்தாரா முதல்முதலில் தனது மகனை கையில் ஏந்திய போது, குழந்தை அவரது முகத்தை தனது பிஞ்சு கரங்களால் வருடிய கியூட்டான புகைப்படங்களை பகிர்ந்து நயன்தாராவிற்கு வாழ்த்து கூறியுள்ளார். அந்த பதிவில் அவர், உலகின் சிறந்த தாய்க்கு முதல் அன்னையர் தின வாழ்த்துக்கள் என அவர் கூறியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.