திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நான் அந்த மாதிரி ஆனதற்கு நடிகர் சிம்புதான் காரணம்.! வெளிப்படையாக சீக்ரெட்டை உடைத்த விக்னேஷ் சிவன்!!
தமிழ் சினிமாவில் சிம்பு மற்றும் வரலட்சுமி நடிப்பில் வெளிவந்த போடா போடி படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். தொடர்ந்து அவர் நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதன் வெற்றியை தொடர்ந்து அவருக்கு
அஜித்தின் AK62 படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். இந்நிலையில் அடுத்ததாக அவர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விக்னேஷ் சிவன் இயக்குனராக மட்டுமின்றி பாடலாசிரியராக நானும் ரவுடிதான், ரெமோ, என்னை அறிந்தால், விக்ரம் வேதா போன்ற படங்களில் பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சிம்பு குறித்து பேசியுள்ளார். நடிகர் சிம்பு, விக்னேஷ் சிவன் இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்களாம். போடா போடி படத்தை இயக்கும்போது விக்னேஷ் சிவன் கூறும் டயலாக்குகளை கேட்டு சிம்பு சிரித்துக் கொண்டே ஊக்குவிப்பாராம். அதன் பிறகு அவர்தான் படங்களுக்கு பாடல்கள் எழுதுமாறு விக்னேஷ் சிவனிடம் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது தான் பாடலாசிரியராக இருக்க சிம்புதான் காரணம் என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.