திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
"தோனி மனைவியுடன் ஃபோட்டோ.." நயன்தாராவை கழட்டிவிட்டுட்டு IPL ஃபைனலில் தனியாக சுற்றிய விக்னேஷ் சிவன்.!
தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய நானும் ரவுடிதான் என்று திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்தின் போது தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இடையே காதலும் மலர்ந்தது.
இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு வாடகை தாய் முறையில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த வருடத்தில் அஜித் குமார் நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது ஆனால் சில காரணங்களால் அவர் அந்த திரைப்படத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் நேற்றுடன் முடிவடைந்தது இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் தமிழ்நாட்டில் இருந்து குஜராத் சென்றனர் . அதிலும் சினிமா துறையைச் சார்ந்த பலரும் அகமதாபாத் சென்று போட்டியை கண்டு ரசித்ததை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்தனர்.
சென்னையில் நடைபெற்ற சிஎஸ்கே அணியின் அனைத்து போட்டிகளுக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஜோடியாக சென்று இருந்தனர். ஆனால் அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி போட்டிக்கு விக்னேஷ் சிவன் மட்டுமே தனியாக சென்று இருந்தார். அவர் தோனியின் மனைவி சாக்ஷி தோனியுடன் செல்பி எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து நயன்தாரா வரவில்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். நயன்தாரா தற்போது பாலிவுட்டில் நடித்துக் கொண்டிருக்கும் ஜவான் திரைப்படம் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகளில் உள்ளதால் நயன்தாரா அவரால் வர முடியவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.