மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தயவுசெஞ்சு அது வேணாம், இத கொடுங்க.! பெற்றோர்களுக்கு வேண்டுகோள் வைத்த விவேக்.! என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபல காமெடி நடிகராக இருந்தவர் விவேக். இவர் படங்களில் தான் நடிக்கும் ஒவ்வொரு காட்சியிலும், ஏதேனும் கருத்துக்களை மையப்படுத்தி அதனை காமெடியாக கூறி மக்களிடையே சேர்ப்பார்.
மேலும் நடிகர் விவேக் தற்போது விஜய் 63 படத்தில் நடிக்க உள்ளார் இந்நிலையில் பெற்றோர்களுக்கு கோரிக்கை வைத்து நடிகர் விவேக் பதிவு ஒன்றை தனது த்விட்டேர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் மாணவர்களுக்கு வாங்கித்தரும் ஸ்மார்ட் செல்போனில் உள்ள கேமரா மற்றும் நெட் வசதியே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது. எனவே பெற்றோர்கள் தங்கள் மகன் மற்றும் மகளுக்கு சாதாரண போன் மட்டுமே கொடுத்தால் போதும் என பதிவிட்டுள்ளார்.
ஸ்மார்ட்போனில் உள்ள நெட் வசதியின் மூலம் பேஸ்புக், வாட்ஸ்ஆப், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவதே சமீப காலமாக ஏற்படும் பெரும் குற்றங்களுக்கு காரணமாக உள்ளது. இதனைக் குறித்தே நடிகர் விவேக் இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளார். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மாணவர்களுக்கு பெற்றோர் வாங்கித்தரும் smart cellphone னில் உள்ள கேமரா மற்றும் நெட் வசதியே அவர்களுக்கு ஆபத்தாக முடிகிறது. பெற்றோர் தங்கள் மகன் மகளுக்கு சாதாரண போன் கொடுத்தால் போதும்.govt shd intervene! @ThanthiTV @sunnewstamil @polimernews @maalaimalar @News18TamilNadu
— Vivekh actor (@Actor_Vivek) 15 March 2019