மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விஜயகாந்தின் உடலை பார்த்ததும் கண்கலங்கி முத்தமிட்ட விஜய் ஆண்டனி.! கனத்த இதயத்துடன் அஞ்சலி.!!
தேமுதிக தலைவரும், பிரபல தமிழ் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் (Vijayakanth) நேற்று தனது 71-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
மறைந்த நடிகர் விஜயகாந்த் மக்களுக்காக பல நலப்பணிகளை செய்த காரணத்தால், அவரின் மறைவு சொந்த வீட்டில் ஏற்பட்ட துக்கம்போல பலரின் மனதில் துக்கத்தை உண்டாக்கியுள்ளது.
அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர்கள் முதல் இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி பேழைக்கு மாலை அணிவித்து முத்தமிட்ட நடிகர் விஜய் ஆண்டனி தொட்டு கும்பிட்டு அஞ்சலி செலுத்தினார்.
Watch | தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலைப் பார்த்ததும் விஜய் ஆண்டனி செய்த நெகிழ்ச்சி செயல்!#SunNews | #RIPVijayakanth | #விஜயகாந்த் | @vijayantony pic.twitter.com/CTsiSEnbCw
— Sun News (@sunnewstamil) December 28, 2023
பின் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்களுக்கு ஆறுதல் கூறி கனத்த இதயத்துடன் கண்கலங்கி புறப்பட்டு சென்றார். இந்த காணொளி காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
Video Thanks: SunNews