திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: தளபதி விஜயை சுற்றிவளைத்து இழுத்த ரசிகர்கள்; ஆர்வக்கோளாறால் 6 பேர் படுகாயம்.!
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை, வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பலரும் தங்களின் வீடுகள், உடமைகளை இழந்து பல இன்னலுக்கு தள்ளப்பட்டனர்.
இவர்களுக்கு அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல்கட்சியினர் என பலரும் தங்களால் இயன்ற உதவியை தொடர்ந்து செய்து வருகின்றனர். வெள்ளம் ஏற்பட்ட நாளில் இருந்து களத்தில் மக்களுக்காக நடிகர் விஜய் மக்கள் இயக்கமும் உதவி செய்து வந்தது.
நடிகர் விஜய் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள, கே.டி.சி நகரில் நடைபெற்ற நிவாரண பொருட்கள் வழங்கும் விழாவில் நேரில் கலந்துகொண்டு, மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.
That’s a wrap 😃👋#NellaiWelcomesThalapathy
— Vijay Fans Trends (@VijayFansTrends) December 30, 2023
pic.twitter.com/ImL3kjFcwT
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசிய பொருட்களும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.1 இலட்சமும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வழங்கப்பட்டது. வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நடிகர் விஜய் திரும்பும்போது, அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று வாங்கினது செருப்படி ...
— 🤘🤘Senthil 🤘🤘🤘 (@Senthilarumuga5) December 30, 2023
இன்னைக்கு திருநெல்வேலி தள்ளுமுள்ளு குளறுபடி ....
என்னடா .....அண்ணனுக்கு @actorvijay எங்க போனாலும் அடி விழுது ...#ஒத்தசெருப்பு#செருப்படி pic.twitter.com/yb26ENx1Gh