திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய விஜய் ரசிகர்! விரட்டி அடித்த ரஜினி ரசிகர்கள்!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இதனை அவரது ரசிகர்கள் பல்வேறு கோணத்தில் கொண்டாடி வருகிறார்கள். ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் மேளம் கொட்டி, பாலாபிஷேகம் செய்து குத்தாட்டம் போட்டு படத்திற்கு நல்ல வரவேற்பையும் பெற்று தந்துள்ளனர்.
மேலும் படம் வசூலை குவிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோவிலில் டிக்கெட்டுகளை வைத்து பூஜை செய்துள்ளனர். இவ்வாறாக ரசிகர்கள் பல்வேறு முறையில் அவர்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொண்டாட்டத்தின் மத்தியில் விஜய் ரசிகர் ஒருவர் 'விஜய் வாழ்க' என்று கோஷமிட்டுள்ளார். இதனால் கடுப்பான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரை ஓட ஓட விரட்டி அடித்துள்ளனர்.