மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. எவ்ளோ நல்ல மனசு!! உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற விஜய் ரசிகர்கள் செய்த பேருதவி! குவியும் பாராட்டுகள்!!
கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனோ வைரஸ் நாடு முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இடையில் கொரோனா பரவல் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவ துவங்கியுள்ளது. இந்த நிலையில் பொதுமக்கள் ஊரடங்கு, மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை மேற்கொள்வது போன்றவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் மத்திய, மாநில அரசுகளும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் நாடு முழுவதும் ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். 2500க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் கொரோனோவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு பெருமளவில் அதிகரித்து உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தளபதி விஜய் சொன்னதன் பெயரில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், மருத்துவர்களுக்குத் தேவையான முகக் கவசங்கள் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்களின் இந்த செயலுக்கு மக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.