மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனது மகனை நினைத்து பெரும்கவலையில் உள்ளாரா தளபதி! நடிகர் விஜய் தரப்பினரே விளக்கம்!
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவிவருகிறது. இத்தகைய கொடிய கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக போராடிவருகிறது. மேலும் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் கொரோனோவை கட்டுப்படுத்த முடியாமல் திணறிவருகிறது.
மேலும் இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், மே 3வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வீடுகளில் நேரங்களை செலவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் மகன் சஞ்சய் கன்னடாவில் படித்துவருகிறார். உலகம் முழுவதும் கொரோனா பரவிவரும் நிலையில் தனது மகன் தனியே வெளிநாட்டில் இருப்பதால் விஜய் மிகுந்த வருத்தத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் விஜய் தரப்பினர், கனடாவில் சஞ்சய் இருப்பது உண்மைதான். ஆனால், அவருக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. அவர் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார். விஜய்யும் அவ்வப்போது அவரது மகனிடம் பேசி வருகிறார். எனவே விஜய் கவலையில் உள்ளார் என்ற செய்தி உண்மையில்லை என விளக்கமளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.