லியோ படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் பறந்த விஜய்.. என்ன நடந்தது தெரியுமா.?



Vijay going to los angeles for his next movie

அக்டோபர் 19ம் தேதி விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகவுள்ள படம் லியோ. இதில் விஜய், திரிஷா, அர்ஜுன், கெளதம் மேனன், சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர்.

vijay

மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், கிளிம்ப்சேக்கள் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போது விஜய் வெளிநாட்டில் சுற்றுலா சென்றுள்ளார். இப்படத்தின் ரிலீசுக்குப்பிறகு 'விஜய் 68' படத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் ப்ரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

vijay

இந்நிலையில், இப்படத்தில் விஜய் இளைஞராகவும், வயதானவராகவும் இரண்டு கெட்டப்பில் நடிக்க உள்ளதாகவும், அதற்காக 3டி VFX  ஸ்கேன் எடுப்பதற்காக லாஸ் ஏஞ்செல்ஸ் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக இந்த டெஸ்டை ஷாருக்கான், கமல் ஆகியோர் மட்டுமே மேற்கொண்டுள்ளனர்.