திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அடுத்த கட்டத்திற்கு தயாரான விஜய்.. அரசியல் பிரவேசம் உறுதி?
தென்னிந்திய அளவில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் என்றால் அது விஜய் தான். இவருடைய திரைப்படங்கள் வெளியானால் சூப்பர் ஸ்டாருக்கே கொடுக்கும் அளவிற்கு அவரது மார்க்கெட் தற்போது உயர்ந்துள்ளது. இதனிடையே நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் போன்றவற்றை நடத்தினார்.
இந்த நிலையில் தற்போது மாநில அளவில் அவரது ரசிகர்களை சந்திக்க விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அரசியல் கட்சி மாநாட்டை போல, இந்த சந்திப்பை ஏற்படுத்த விஜய் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், இதற்கான ஏற்பாடு நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும் இந்த மாநாடு மதுரை அல்லது திருச்சியில் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.