#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"தலைவர மாறியே தான் தளபதியும்..." ஜெய்லர் ஆடியோ வெளியீட்டு விழாவில் உண்மையை போட்டு உடைத்த விடிவி கணேஷ்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்தத் திரைப்படத்திலிருந்து ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. படம் வெளியாவதற்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது .
இந்த விழாவில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக இருக்கும் தளபதி விஜய் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் சினிமா பிரபலங்களும் பங்கேற்று வருகின்றனர். மேலும் திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் தங்களது அனுபவங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
அப்போது மேடையில் பேசிய விடிவி கணேசன் தளபதி விஜய்க்கு பிறகு டைமிங் மற்றும் சின்சியாரிட்டியை தலைவர் ரஜினிகாந்திடம் தான் பார்த்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் மிகவும் எளிமையான மனிதராக ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்து கொண்டார் என்றும் கேராவன் இருந்தாலும் எப்போதும் வெளியில் இயற்கையோடு தான் அமர்ந்து இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். இது போன்ற எளிய குணங்களை விஜயுடன் பீஸ்ட் படத்தில் நடிக்கும் போது தளபதி விஜயிடம் கண்டதாக கணேஷ் தெரிவித்திருக்கிறார்.