திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. 2 பாகங்களாக வெளியாகும் 'லியோ' திரைப்படம்.!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன், திரிஷா, சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைந்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து லியோ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதன்படி சமீபத்தில் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளையொட்டி க்ளைம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்த நிலையில் லியோ படத்திருக்கான சில காட்சிகளை எடுக்க படக்குழு மீண்டும் காஷ்மீர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் லியோ படத்தை 2 பாகங்களாக வெளியிட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளதாக தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது. அதன்படி இரண்டாம் பாகம் 2025ம் ஆண்டு வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.