திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆடியோ லான்ச் அனுமதி விவகாரம்: "ஆட்சியை பிடிக்கலாம் நண்பா" - விஜய் ரசிகர்கள் பரபரப்பு போஸ்டர்.!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிரூத் இசையில், இளையதளபதி விஜய் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் லியோ. இப்படத்தில் நடிகர்கள் விஜய், திரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன், அர்ஜுன் தாஸ், ஜியார்ஜ் மரியான் உட்பட பலரும் நடித்திருக்கின்றனர்.
படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இறுதியில் அவை தமிழ்நாடு காவல்துறையின் அனுமதி மறுப்பு மற்றும் அரசின் தடை காரணமாக இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.
இதற்கு அரசு சக்கரத்தில் இருப்பவர்களே காரணம் என பலரும் காரணங்களையும், கண்டனங்களையும் தெரிவித்து வரும் நிலையில், விஜய் ரசிகர்கள் அரசு எதிராக செயல்பட வேண்டும் என குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு மத்திய மாணவரணி சார்பில் அச்சிடப்பட்டு, அப்பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள சுவரொட்டிகளில், "ஆடியோ லாஞ்சுக்கு அனுமதி இல்லை என்றால் என்ன?. ஆட்சியை பிடிச்சிட்டா போச்சு.. என்ன நண்பா?" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது விஜய் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.